ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் சாலை மற்றும் கால்வாய் வசதி வேண்டி ஆட்சியரிடம் மனு!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்களிடம் மனு அளித்தனர் அதில் கூறி இருப்பதாவது :- ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாஜ் புரா பஞ்சாயத்துக்கூட்பட்ட பகுதிகளில் மழை நீர் செல்லும் வழிகளில் சுவர்களை எழுப்பி தடை செய்வதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 12 அடி சுவரை அகற்றி நாங்கள் கால காலமாக சென்று கொண்டிருந்த இடுகாட்டிற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டி கோரிக்கை மனு அளித்தனர்.

ஆற்காடு வட்டம் தாஜ் புரா பஞ்சாயத்து j.கிருஷ்ணா வரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நாங்கள் ஆறு தலைமுறையாக வசித்து வருகிறோம் ஆதிதிராவிடர் பகுதியில் 7 தெருக்கள் உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர்கள் அந்தத் தெருக்களின் ஓடைகளில் வந்து சேரும். தாங்கள் சுடுகாட்டுக்கு செல்லும் வழியும் இருந்து வந்தது தற்போது அந்த வழியை தர்மிசந்த் S/O சம்பத்ராஜ்   248யில் 5.65 ஏக்கரில் சுற்றுவட்டாரப் பகுதியில் சாலை எல்லாம் பறித்து முழுவதுமாக அரசு அனுமதி மற்றும் பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் சுமார் 12 அடி உயரத்தில் காம்பௌண்ட் சுவர் கட்டியுள்ளார். மழைக்காலங்களில் மழை நீர் வெளியேற்றுவதற்கும் வழி இல்லாமலும் மற்றும் காற்றோட்டம் இல்லாமலும் ஆதிதிராவிட மக்கள் சுடுகாட்டுக்கு செல்லும் வழி இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தற்போது அரை கிலோமீட்டர் வரை சுற்றி செல்கிறோம் இந்த இடம் ஆதிதிராவிட நல துறையால் எங்களுக்கு வழங்கப்பட்டது.

காந்திநகர் யாதவ தெரு மருத்துவ காலனி பழைய அருந்திய பாளையம் புதிய அருந்ததிய பாளையம் அம்மன் நகர் மேற்கண்ட பகுதி அனைத்தையும் மழை நீர் அனைத்தும் ஆதி திராவிடர் பகுதியாக. அங்கன்வாடி வழியாக செல்கிறது ஆக்கிரமித்துக் காட்டப்பட்ட 12 அடி சுவற்றினால் மழைநீர் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் பகுதியில் சுமார் 600 குடும்ப குடும்பங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். மழை நீரும் கால்வாய் நீரும் சேர்ந்து போவதற்கு வழி இல்லாமல் தெருக்களில் சேர்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  அங்கன்வாடிக்கு செல்லும் சிறுபிள்ளைகள் நடக்க முடியாமலும் சேற்றில் விழுந்து எழுந்து பள்ளிக்கு செல்கின்றனர் இந்த அவல நிலையை போக்க வேண்டும் .

ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 12 அடி சுவர் தலைவர் சேட்டு என்பவர் பினாமி சொத்து அந்த சொத்தில் உங்களுக்கு கட்டித் தர முடியாது நீங்க யாரிடம் முறையிடுங்கள் என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் தலைவர் ஆகிய அம்மா அவர்கள் தலையிட்டு எங்களுக்கு நியாயம் வழங்க கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு கிராம மக்கள் என மனு அளித்திருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!