அரக்கோணம்: திருத்தணி சாலையில் ரோபோடிக் பிசியோதெரபி கிளினிக் எம். எல். ஏ. சு. ரவி திறந்து வைத்தார்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் திருத்தணி நெடுஞ்சாலை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி எதிரில் சாய் சரண் நவீன ரோபோடிக் ஸ்பெசலிஸ்ட் கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது கிளினிக் தலைமை மருத்துவர் ஜெ.சுரேஷ் பாபு தலைமை தாங்கினார் சாய் சரண் ரோபோடிக் பிசியோ ஸ்பெசலிஸ்ட் நவீன கிளினிக் நிர்வாக இயக்குனர் ஷாலினி வர்தனா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி கலந்து கொண்டு நவீன ரோபோடிக் சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார் விழாவில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ் பழனி ஒன்றிய மாவட்ட பிரதிநிதி நரேஷ் காந்த் மாவட்ட எம் ஜி ஆர் மன்றம் சேகர் தலைமை ஆசிரியர் ஜெயராம நாயுடு உள்ளிட்ட அரக்கோணம் திருத்தணி வட்டார இந்திய இயன் முறை சங்க மருத்துவர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர் இறுதியில் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இந்திய இயன் முறை மருத்துவர்கள் சங்க தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் மருத்துவர் அமர்தீப் விஜயக்குமார் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக