சூர்யா சார் தவெகவுக்கு வாங்க ரசிகர்கள் ஆரவாரம்!!
தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது என்றால் மறுபுறம் திரை உலகம் அதை விட பரபரப்பாக இயங்கி வருகிறது. மொத்த திரையுலகமும் சூர்யாவின் கருப்பு படம் மே 14ஆம் தேதி வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், படத்தின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இது மட்டும் இல்லாமல் படம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் சூர்யாவை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொள்ளச் சொல்லி இணையவாசிகளும் விஜய் ரசிகர்கள் சிலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக