திண்டுக்கல் அருகே பெண் காவலர் தற்கொலைக்கு முயற்சி செய்த வழக்கில் ஆண் காவலர் கைது செய்து சிறையில் அடைப்பு!!

திண்டுக்கல், தோட்டனூத்து, புளியம்பட்டியை சேர்ந்த பேபி(28) கோவை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த மாதம் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதுகுறித்து புறநகர் DSP.(பொறுப்பு) குமரேசன் தலைமையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர். உலகநாதன் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டதில் பேபி கிருஷ்ணகிரி ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்த போது கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினத்தை சேர்ந்த காவலர் வீரமணி இருவரும் பழகி காதலித்து வந்ததாகவும், ஆனால் வீரமணி திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வேறொரு பெண்ணை கடந்த மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் பேபி மன உளைச்சலில் தற்கொலைக்கு முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் காவலர் வீரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!