ஆண்டுதேறும் முன்னாள் மாணவர்கள் நாள் சந்திப்பு விழா கொண்டாடுங்கள்... ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் விஐடி துணைத் தலைவர் பேச்சு!!...

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆண்டுதேறும் முன்னாள் மாணவர்கள் நாள் சந்திப்பு விழா கொண்டாடுங்கள்  என  ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் விஐடி துணைத் தலைவர்.  சங்கர்  விஸ்வநாதன் பேசினார்.

ராணிப்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1993 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன் 10, 12 ஆம் வகுப்பு படித்த முன்னாள்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  சந்திப்பு விழா "சங்கமம் -2026 " என்ற நிகழ்வு  பள்ளி  வளாகத்தில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளி செயலர் ஓம் தனசேகரன் தலைமை வகித்தார்.தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் கே.சுதாகர் வரவேற்றார்.

விழாவில் வேலூர் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வாளகத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பில் கட்டப்பட்ட மாணவர்கள் தினசரி வழிபாட்டு மேடையை திறந்து  வைத்து  வாழ்த்திப் பேசியதாவது... 

ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்  குடும்பத்தினர் சந்திக்கும் சங்கமம் 2026 குடும்ப விழாவுக்கு  என்னை  அழைத்த முன்னாள் மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.நானும்  வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப்  பள்ளியின் முன்னாள்  மாணவர்கள் சங்க  தலைவராக  இருந்து  வருகிறேன்.அந்தப் பள்ளிக்கு இந்த ஆண்டு வயது 150 ஆகிறது.மேலும் தந்தை  பெரியார் பாலிடெக்னிக்,ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி, ஆஸ்திரேலியா முன்னாள் மாணவர்கள் சங்க உறுப்பினராக உள்ளேன்.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வுக்கு  வந்திருக்கும்  உங்களுக்கு பழைய  ஞாபகம்  வந்திருக்கும்.ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே என்ற பாடல் போன்ற நீங்க அமர்ந்த பெஞ்ச், வகுப்பறை எல்லாம் நினைவுக்கு  வந்திருக்கும்.நாங்கள் விஐடி  பல்கலைக் கழகத்தில்  ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் முன்னாள் மாணவர்கள்  சந்திப்பு நிகழ்வு நடத்துகிறோம்.  அதே போல் நீங்களும் ஆண்டுக்கு ஒருநாள் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வை  நடத்துங்கள்.தலைமை ஆசிரியர்,ஆசிரியர்,  மாணவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தகவல் தெரிவித்து முன்னாள் மாணவர்கள் நாள் சந்திப்பு விழா  கொண்டாடுங்கள்.அன்றைய  நாளில்  கல்வி, காவல் துறை, தொழிலில் சாதித்த இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்த  வெற்றியாளர்களுக்கு ஆண்டு தோறும் விருது வழங்குங்கள். விருதோடு  நிற்காமால்  மாவட்டந்தோறும்  முன்னாள்  மாணவர்  அத்தியாயயம் "Chapter" தொடங்கி  வெற்றியாளர்களுக்கு விருது வழங்க வேண்டும்.  முனானாள் மாணவர்களாகிய நீங்கள் தற்போது தொழில் அதிபர்களாகவும், அரசு  அதிகாரிகளாகவும் பெரிய பொறுப்பில் இருப்பீர்கள், நீங்கள் பள்ளி வேலை நாட்களில்  வருகை  தந்து  ஏழை,எளிய மாணவர்களுக்கு நோட்டுபுத்தகங்கள் இலவசமாக வழங்கலாம், உங்களது  அனுபவத்தையும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வியையும்  மாணவர்களுக்கு சொல்லித்தாருங்கள், அதன் மூலம் உங்களது அனுபவங்கள் மாணவர்கள்  சேரட்டும், அதனால் அவர்கள் வெளியில் சென்று பயனடைந்து வருங்கலத்தில்  அவர்களும்  அவர்களது அனுபவங்களை வழங்குவார்கள்.இனி ஆண்டுதேறும் முன்னாள் மாணவர்கள் நாள் சந்திப்பு விழா  கொண்டாடுவீர்களா என்றார்.

விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கோட்டீஸ்வரன்,அருட்செல்வன், ஆசிரியர்கள் நித்தியானந்தன், நாகராஜ் மற்றும் ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள்  சந்திரகுமார் பாரதிதாசன், சதீஷ்குமார், நவீன்குமார், மாலா, லஷ்மிதேவி, சசிகலா, சீனிவாசன் மற்றும்  அவர்கள் குடும்பத்தினர் கலந்துகொண்டு பழைய  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!