மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் பொது சுகாதாரத்துறை மற்றும் ஸ்டார் குரு சாரிடபிள் பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்!!

மதுரை பொன்மேனி குமரன் தெரு பகுதியில் நடைபெற்றது  முகாமினை ஸ்டார் குரு சாரிட்டபிள் பவுண்டேஷன் நிறுவனர் திரு ஸ்டார் குருசாமி அவர்கள் தொடங்கி வைத்து பேசுகையில் மதுரை மாவட்டத்தில் ஸ்டார் குழு சார்பில் பவுண்டேசன் சார்பாக நாள்தோறும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆயிரம் பேருக்கு உணவு வழங்கும் நிகழ்வு 800 நாட்களை கடந்து வருகிறது அதே போன்று வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி போதைக்கு எதிரான விழிப்புணர்வு பணிகள, கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கி மக்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றி வருகிறது. 

இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பல்வேறு கால சூழலில் தனது உடல் சார்ந்த பிரச்சனைகளை கவனிக்காமல் நோய் முற்றிய நிலையில் பலரும் அவதிப்படுவதை பார்க்க நேரிடுகிறது .

அதிலும் குறிப்பாக செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள, இரவு தூக்கமின்மை, சர்க்கரை நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள், கிட்ட பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்சனைகளில் மக்கள் அதிக அக்கறை செலுத்தாமல் நோய் முற்றிய நிலையில் கண்பார்வை பறிபோகும் அளவிற்கு சூழல் இருப்பதனை கண்டு அதிலும் குறிப்பாக கடைநிலை மக்களான கூலித் தொழிலாளிகள் மத்தியில் கண் பற்றிய விழிப்புணர்வு இல்லாததைக் கண்டு அதனை சீர்படுத்தும் விதமாக ஸ்டார் குழு சாரிடபிள் பவுண்டேஷன் சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது என்றார் பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் சிறிய குறைபாடுகள் கொண்டவர்களுக்கு பரிசோதனையும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

உடனடியாக கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய 21 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன இது போன்ற முகாமை நடத்தி தந்த ஸ்டார் குரூப் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி அவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றியை தெரிவித்தனர்*

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!