குமரி. கனிம வள லாரிகளின் அனுமதி சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்த மூன்று போலீசார் பணியிடை நீக்கம்!-மாவட்ட எஸ்.பி.டாக்டர். ஸ்டாலின் அதிரடி!!

நெல்லை மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு அதிக அளவு கனிம வள கடத்தல் நடந்து வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் அதிக அளவு விபத்துகளும் நடந்து வந்தது. மேலும் போலி அனுமதி சீட்டு மூலம் கனிம வளங்கள் கனரக டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார். 

ஆனால் அதை எல்லாம் மீறி புது புது வழிகளில் கனிமவள கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்தது. மேலும் கனிமவள கடத்தல் கும்பல்கள் சோதனை சாவடியில் போலி அனுமதி சீட்டுகளை உண்மை என கூறி போலீசாரை ஏமாற்றி கனிமவள கடத்தல்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் கேரளாவுக்கு கனிம வளம் கொண்டு செல்வது தடுக்கப்பட்டது. 

இந்நிலையில் நான்கு வழி சாலையில் உள்ள குமாரபுரம் அருகே காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் கனிமவள லாரிகளின் அனுமதிச்சீட்டை முறையாக சோதனை செய்யாமல் அனுமதித்ததாக மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்பி சோதனை சாவடியில் இருந்த மூன்று போலீசாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 

குறிப்பாக  அருமனை காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் கோபால், ஈத்தாமொழி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வினோத், கன்னியாகுமரி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் வாட்சன் ஆகியோர் குமாரபுரம் சோதனை சாவடியில் பணியில் இருந்ததும் அவர்கள் தான் கனிம வள வாகனங்களின் அனுமதிச்சீட்டை முறையாக பரிசோதிக்காமல் அனுமதித்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் சோதனை சாவடியில் பணியாற்றும் போலீசார் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் பணியிடை நீக்கம் மட்டுமல்லாது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட எஸ்பி எச்சரித்து உள்ளதால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 

மாவட்ட எஸ்பி யின் அதிரடி நடவடிக்கையால் சோதனை சாவடியில் உள்ள போலீசார் இனி அதிக விழிப்புடன்  பணியாற்றுவார்கள் என்பதுதான் தற்போதைய நற்செய்தியாக உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!