குடியாத்தத்தில் அரசு பஸ் மோதி முதியவர் பலி!!
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் இருந்து அரசு பஸ் பயணிகளை ஏற்றுக்கொண்டு நேற்று மதியம் வழக்கம் போல் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்திற்கு சென்றுள்ளது , குடியாத்தத்தில் 15ஆம் தேதி கங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெற உள்ளது இதனால் குடியாத்தம் பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பாக உள்ளது , இந் நிலையில் பஸ் புதிய பஸ் நிலையத்திற்கு நுழைந்தது அப்போது பஸ் நிற்பதற்கு முன்பாக பயணிகள் பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளனர் சிலர் பஸ்ஸில் சீட்டு பிடிப்பதற்காக ஏரி உள்ளனர் , இந்த கூட்டம் நெருச்சலில் முதியவர் ஒருவர் பஸ்ஸின் முன் பக்கம் நின்று இருந்துள்ளார். இவர் பஸ் வருவதை கவனிக்கவில்லை என கூறப்படுகிறது , முதியவர் நின்று கொண்டிருந்ததை கவனிக்காத பஸ் டிரைவர் ரவி பஸ்சை இயக்கி உள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் முன் பக்க பஸ் டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை செய்ததில் குடியாத்தம் அடுத்த வீ மோட்டார் பகுதியை சேர்ந்த சண்முகம் 70 என தெரியவந்துள்ளது இறந்த இவரின் உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக