வேஷம் போடுகிறார்! ரவி மோகன்!!
யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன்! ரவி மோகனுக்கு மாமியார் சுஜாதா பதிலடி சென்னையில் யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன் என ரவிமோகனின் மாமியாரும் ஆர்த்தியின் தாயுமான சுஜாதா தெரிவித்துள்ளார். ஆர்த்தி, அவரது குடும்பம் குறித்து காலை ரவிமோகன் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்த நிலையில் சுஜாதா பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: ரவிமோகனின் அவதூறுகளுக்கு பதில் அளிக்கப்படும். யார் கையை அறுத்து திருமணம் செய்தது என்பதை நிரூபிப்பேன்.வேஷம் போட்டு ரவி மோகன் பேட்டி கொடுத்துள்ளார். இந்த 2 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ரவிமோகன் பிள்ளைகளை சந்தித்துள்ளார்.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக