நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
ஜனாதிபதி ஆட்சி வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன:
‣ ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய். பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு பட்டியலை கேட்பதால் தொடரும் சிக்கல்.
‣ 3 நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகன பாதுகாப்பு வாபஸ். பெரும்பான்மையை நிரூபித்த பிறகு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல்.
‣ அதிமுக எம்எல்ஏ-க்கள் 20-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி விடுதியில் தங்கவைப்பு. சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு என தகவல்.
‣ த.வெ.க-வுக்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு கே.பி.முனுசாமி மறுப்பு. எந்த நிலையிலும் தவெக-வுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என திட்டவட்டம்.
‣ திமுக உடனான 20 ஆண்டு கால கூட்டணியை முறித்தது காங்கிரஸ். வகுப்புவாத சக்திகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு.
‣ திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு காங்கிரஸ் பச்சைத் துரோகம் செய்துள்ளதாக டி.ஆர்.பாலு விமர்சனம். குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் தமிழ்நாட்டில் செய்திருப்பதாகவும் காட்டம்.
‣ மேற்குவங்கத்தில் பாஜக மாநில தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை. காரில் சென்றவரை விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய கும்பல்.
‣ மேற்குவங்கம் மாநிலத்தில் நாளை மறுநாள் பாஜக அரசு பதவியேற்பு. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்பு.
‣ தருமபுரி சுற்றுவட்டாரத்தில் பலத்த காற்றுடன் கொட்டிய கனமழை. ஒருமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்.
‣ திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கிய கனமழை. 6 மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை.
‣ பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது திமுக எம்எல்ஏக்கள் கூட்டம். எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு, தேர்தல் முடிவு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு.
‣ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு. வெற்றியின் போது மட்டுமின்றி, இக்கட்டான சூழலிலும் உடன் இருப்பேன் என உறுதி.
‣ புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதில் தொடரும் இழுபறி. துணை சபாநாயகர் மற்றும் அமைச்சரவையில் பாஜக பங்கு கேட்பதால் சிக்கல்.
‣ அரசுக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் 29ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.
‣ மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி. இன்று காலை 10.30 மணிக்கு இறுதிச் சடங்கு என நடைபெறும் என அறிவிப்பு.
‣ புலி திரைப்படத்திற்கு பெற்ற 15 கோடி வருவாயை மறத்ததாக புகார். விஜய் மீதான மோசடி வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உயர்நீதிமன்றம் உத்தரவு.
‣ தேனி அருகே ஆண்டிபட்டியில் களைகட்டிய வினோத திருவிழா. உடம்பில் சேறு பூசியும், துடப்பத்தால் அடித்தும் நேர்த்திக்கடன்.
‣ ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து. 8 பேர் உயிரிழப்பு, 35க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
‣ ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி. புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது ஐதராபாத் அணி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக