தற்காப்புக் கலைகளின் தாய் கலை என்றழைக்கபடும், சிலம்பப் போட்டி, மாநில அளவில் கோவை கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது !!


கோவை மாவட்டம்,கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண அரங்கில், மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இதனை, கடந்த 46 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை கவுண்டம்பாளையம், கணுவாய், காரைக்குடி, தேவகோட்டை, மதுரை, சென்னை, உள்ளிட்ட பல்வேறு   பகுதிகளில் பயிற்சி மையங்கள் அமைத்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிலம்ப கலையை மாணவ மாணவியர்களுக்கு கற்று தரும், ஆதித்யா சிலம்பப் பாசறை பயிற்சி மையம் நடத்தியது.  தற்போது நடைபெற்ற சிலம்ப போட்டியில் மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொள்ளாச்சி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களை தட்டிச் சென்றனர். 


ஆதித்யா சிலம்ப பாசறையின் 46வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நான்காவது ஆண்டு  மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை, ஆதித்யா சிலம்ப பாசறையின் நிறுவனரும் தலைமை ஆசானுமான  எம்.எஸ்.ஆர் முத்து பாண்டியன் செய்திருந்தார். மேலும் சிலம்ப கலையை ஊக்குவிக்கும் விதமாக, சிலம்ப ஆசான்களுக்கும், சிலம்ப பயிற்சியாளர்களுக்கும், விருதுகள் வழங்கபட்டது. மேலும், 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்யா சிலம்பப் பாசறையில் பயிற்சி பெற்ற, பழைய மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும்  வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு கவுண்டம்பாளையம் ஜவகர், சரத், விக்னேஷ், வழக்கறிஞர் ராஜேந்திரன், கோவை நல்லுறவு சங்க நிறுவனர் சுக்ருல்லா பாபு,   சதீஷ், லாரல் மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர்   அபிஷேக் பால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் பதக்கங்களை  வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!