நடிகர். அஜித்குமாரின் தாயார். மோகினி அவர்கள் மறைந்த செய்தியறிந்து, திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்!!

நடிகர். அஜித்குமாரின் தாயார். மோகினி  அவர்கள் மறைந்த செய்தியறிந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்!

 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான இரங்கல் செய்தியில்,

"அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார். மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்

உயிர்கொடுத்து, தன் மகன் திரையுலகில் மாபெரும் உயரங்கள் தொட்டதைப் பார்த்துப் பெருமகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை" என்று உருகியுள்ளார். 

மேலும், அன்னையுடனான அழகிய நினைவுகளும் தருணங்களுமே இந்தத் தாள முடியாத துயரத்தில் இருந்து அவர் மீண்டு வரத் துணைநிற்க வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த ஆறுதலையும் இரங்கலையும் பகிர்ந்து கொண்டுள்ளார்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!