இரத்தினம் குளோபல் பல்கலைக்கழக துவக்க விழா, தரமான கல்வி, தொழில்நுட்பம், தொழில் முனைவோர் வளர்ச்சி என சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட உள்ளதாக இரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவர் மதன் ஏ.செந்தில் பேச்சு!!
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள, இரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், இரத்தினம் குளோபல் பல்கலைகழகமாக புதிய பெயரில் புதிய பல்கலைக்கழக அடையாளத்துடன் செயல்படவுள்ளது...
இந்நிலையில் இதற்கான துவக்க விழா இரத்தினம் கிராண்ட் ஹால் வளாகத்தில் நடைபெற்றது..
விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வியாளர்கள்,பல்வேறு தொழில் முனைவு துறைகளை சேர்ந்த தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்...
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதன் ஏ செந்தில்
யூஜிசி 2023 விதிமுறைகளின் கீழ் தமிழகத்தில் முதன்முறையாக நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்தஸ்தைப் பெற்ற கல்வி நிறுவனமாக இரத்தினம் குளோபல் பல்கலைக்கழகம் அறிமுகமாகி உள்ளதாக குறிப்பிட்ட அவர், இரத்தினம் குளோபல் பல்கலைக்கழகம், கல்வி, தொழில்நுட்பம், தொழில் முனைவோர் வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதிய கல்வி சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்....
இரத்தினம் கல்வி நிறுவனங்கள் நீண்ட வருடங்களாக கல்வித்துறையில் சேவையாற்றி வருவதாக கூறிய அவர்,தற்போதைய நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களை உருவாக்க இருப்பதாக தெரிவித்தார்...
குறிப்பாக எதிர்கால தலைமுறைக்கான புதுமையான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த பல்கலைக்கழகம் செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்...
இந்த சந்திப்பின் போது இரத்தினம் கல்வி குழுமங்களின் சி.இ.ஓ.மாணிக்கம்,சி.பி.ஓ.நாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக