கணவரை சுட்ட போலீஸ் அதிகாரியை கைது செய்ய வேண்டும்.. மணிகண்டன் மனைவி பொன்மணி கோரிக்கை!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 7.04. 2026 அன்று மருதம் புத்தூர் கிராமத்தில் உதவிக் காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா என்பவரால் சுடப்பட்ட மணிகண்டனின் மனைவி பொன்மணி மணிகண்டன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் எனது கணவரை சுட்ட உதவி காவல் துறை ஆய்வாளர் இசக்கி ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனது கணவருக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்கி அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறினார் மேலும் எந்த உதவியும் நீதியும் கிடைக்கவில்லை என்றால் வருகின்ற 26 5 2026 அன்று ஆலங்குளம். கிராமத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்று கூறினார். அப்போது அருகில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு தமிழ்நாடு நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் எஸ்.பி. சிலுவை மற்றும் வழக்கறிஞர் திலக் மற்றும் வழக்கறிஞர் நம்பிராஜன் உடன் இருந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக