அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஶ்ரீஅடைக்கல காத்த அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் புரவி எடுப்பு திருவிழாவில் கீழ்க்குடி வேளாளர் தெருவில் களிமண்ணால் செய்யப்பட்ட, ஸ்ரீஅய்யனார் கருப்பர் முனீஸ்வரர் காளியம்மன் உள்ளிட்ட சிலைகளும் குதிரை,காளை மதளை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின் கடந்த 15 நாட்களாக விரதம் இருந்த பக்தர்கள் வாகனங்களில் சுமந்து 10 கிலோமீட்டர் தூரம் மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து எடுத்து செல்லப்பட்ட சுவாமி சிலைகள் மற்றும் குதிரை காளை சிலைகள் மீனாட்சி அம்மன்கோவில் முன்பு இறக்கி வைத்து சுவாமி மற்றும் குதிரைகளுக்கு கண் திறந்து வழிபட்டனர்.
இப்படி செய்தால் விவசாயம் செழிக்கும் மழை பெய்யும் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்
இத்திருவிழாவை கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடினர்.விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.






கருத்துகள்
கருத்துரையிடுக