அரசு ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம்!!
டெல்லியில் அனைத்து அரசு துறை ஊழியர்களும் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற டெல்லி முதல்வர் ரேகா குப்தா உத்தரவு.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக தனியார் நிறுவனங்களும் அறிவிப்பை வெளியிடுமாறு ரேகா குப்தா வேண்டுகோள்
திங்கட்கிழமை தோறும் 'மெட்ரோ திங்கள்’ தினமாக கடைபிடிக்கப்படும்; திங்களன்று அமைச்சர்கள், அதிகாரிகள் வாகனங்களை தவிர்த்து மெட்ரோ ரயிலில் அலுவலகத்துக்கு வரவும் முதல்வர் ரேகா குப்தா உத்தரவு
பிரதமர் மோடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து தனது வாகன அணிவகுப்பையும் 60% குறைத்தார் ரேகா குப்தா
டெல்லி முதல்வரின் வாகன அணிவகுப்பில் தற்போது 4 வாகனங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றில் 2 மின்சார வாகனங்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக