குடியாத்தத்தில் தனியார் ஏடிஎம் மையத்திற்குள் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்! பொதுமக்கள் அச்சம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து . நிலையத்தின் எதிரில் உள்ள சவுத் இந்தியன் . தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் இரவு பகல் என்று அதன் உள்ளே அமர்ந்து கொண்டு அசுத்தம் செய்து கொண்டு உள்ளார்.
இது சம்பந்தமாக வங்கியின் நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் சொல்லியும் எந்த ஒரு முயற்சியும் வங்கி நிர்வாகம் எடுக்கவில்லை.
மேலும் ஏடிஎம் மையத்துக்கு செல்லும் பொதுமக்கள் மனநிலை நோயாளி உள்ளே இருப்பதால் பெரிதும் அச்சத்துடன் . செல்லுகிறார்கள் இதைக் குறித்து வங்கி நிர்வாகம் உடனடி நடவடிக்கையாக நிரந்தர காவலர் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக