ராணிப்பேட்டையில் நடைபெற்ற எல்ஐசி அலுவலகம் முன்பு மே தினக் கொடியேற்றம் : எல்ஐசி ஊழியர் சங்கம் (லிக்காய்) உற்சாகம்!!

 

ராணிப்பேட்டை மாவட்டம் - உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பாக மே தினக் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.

எல்ஐசி ஊழியர் சங்கத்தின் (லிக்காய்) கிளைத் தலைவர் கே. ரவிக்குமார் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கக் கொடியினை மாநில செயலாளர் தா. வெங்கடேசன் ஏற்றி வைத்து மே தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். ​

உடன் கிளைச் செயலாளர் ​உபயதுல்லா, துணைத் தலைவர் ​ஜெயக்குமார், துணைச் செயலாளர்கள் ​செல்வம், எம். கணபதி, பார்த்திபன் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்வாகிகள் தொழிலாளர் உரிமைகள், ஒற்றுமை மற்றும் தற்போதைய சூழலில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து உரையாற்றினார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட வரலாற்றை நினைவு கூர்ந்து, சங்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசினர்.

​நிகழ்ச்சியின் நிறைவாக, கிளைப் பொருளாளர் மணிமாறன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் திரளான எல்ஐசி ஊழியர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!