நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
🗞️ திமுக தலைவர். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர். விஜய். ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்.
🗞️தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வாகிறார் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர். துணை சபாநாயகராக துறையூர் எம்.எல்.ஏ., ரவிசங்கர் தேர்வாகிறார்.
🗞️வைகோ, அன்புமணி, சீமான் என அடுத்தடுத்து தலைவர்களை சந்தித்த விஜய். முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து நேரில் சந்தித்து வாழ்த்து வேட்டை.
🗞️பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வலியுறுத்தி அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி. எஸ்.பி.வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அணிதிரள்வதால், அதிமுகவில் மீண்டும் பிளவு!
🗞️திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ., ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவகாரம். திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக