அமைச்சர்களிடம் சத்தியம் வாங்கிய முதலமைச்சர்!!

அமைச்சராக்கும் முன்பே தவெகவினரிடம் சத்தியம் வாங்கிய முதல்வர் விஜய்.. என்ன காரணம்?முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாகி உள்ளனர். இந்நிலையில் தான் முதல்வர் விஜய் அமைச்சர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனை வனத்துறை அமைச்சரான காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார் உறுதி செய்துள்ளார். விஜய் வாங்கிய இந்த சத்தியத்தின் பின்னணி பற்றிய விவரம் வருமாறு... தவெகவின் 21 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.இந்நிலையில் தான் தவெகவினர் அனைவரிடமும் ஊழல் செய்யக்கூடாது. மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் தொடக்கூடாது என சத்தியம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தவெக தரப்பு உறுதி செய்துள்ளது.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!