குடியாத்தம் அருகே பழைய வீட்டை இடித்த நிலையில் காடு புறம்போக்கு நிலம் எனக் கூறி புதிய வீட்டை இடிக்க உள்ளனர்!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லபாடி. கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் யுவ குமார் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்துள்ளார். அதில் கடந்த ஏழு ஆண்டுகளாக நான் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறேன் காடு புறம்போக்கு . நிலம் எனக் கூறி எனது பழைய வீட்டையும் புதிதாக . கட்டிய கழிவரையும் 2023 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு எனக்கூறி . இடித்து விட்டனர் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து விபரங்களை கேட்டேன் கடந்த மூன்று ஆண்டுகள் ஆகியும் தகவல் கொடுக்கவில்லை மீண்டும் நீதிமன்ற உத்தரவு எனக் கூறி பட்டா நிலத்தில் உள்ள புதிய வீட்டையும் இடிக்க வருவாய்த்துறை யினர் முயன்று வருகின்றனர் கடந்த 1916 ஆம் ஆண்டு முதல் இந்த நிலம் புஞ்சை நிலமாக தான் இருந்தது அதன் அடிப்படையில் காடு புறம்போக்கு நிலம் எனக் கூறுகிறார்கள் எனவே இதைக் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று . அம் மனுவில் கூறியுள்ளார்கள் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வே .இரா. சுப்புலட்சுமி அவர்கள் இதை குறித்து . வருவாய் கோட்டாட்சியர் . சுபலட்சுமி இடம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக