மதுரை வடக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரலாற்று வெற்றி – விஜய் அன்பன் கல்லானை மாபெரும் வெற்றி!!

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் விஜய் அன்பன் கல்லானை மாபெரும் வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். அவர் 18,038 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதி மக்களின் உறுதியான ஆதரவை பெற்றுள்ளார்.

 சிறு வயது முதலே நடிகர் விஜயின் தீவிர ரசிகராக இருந்த கல்லானை, தனது அரசியல் பயணத்தை ரசிகர் மன்றத்தின் மூலம் தொடங்கினார். கடந்த 30 ஆண்டுகளாக சமூகப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டு, மக்களின் நம்பிக்கையை பெற்றவர் என பரவலாக அறியப்படுகிறார். குறிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்து செயல்படுத்தி, மதுரை வடக்கு பகுதியில் வலுவான மக்கள் ஆதரவை உருவாக்கியுள்ளார்.

இந்த தேர்தலில் அவரது  பிரச்சாரம், தினந்தோறும் மக்கள் சந்திப்பு, மற்றும் வீடு வீடாக பிரச்சாரத்தை கட்சியின் கொள்கையை விலக்கியது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

      இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கும், எதிர்கால அரசியல் மாற்றத்திற்கும் முக்கிய அடித்தளம் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

     மேலும், கட்சித் தலைவர் தளபதி விஜய் தலைமையிலான அமைச்சரவையில் கல்லானை அவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தத்தில், விஜய் அன்பன் கல்லானையின் இந்த வெற்றி ஒரு சாதாரண தேர்தல் வெற்றி மட்டுமல்ல; நீண்டகால உழைப்பின் பலனாகவும், மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!