முதல்வர். விஜய் டெல்லி செல்லவிருக்கிறார்!!
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்.. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (மே 23) டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் டெல்லி செல்லவுள்ள விஜய், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி, வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்
கருத்துரையிடுக