அரக்கோணம் டாஸ்மாக் கடை அகற்றும் முதல்வருக்கு அறக்கட்டளை சார்பில் நன்றி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் டாஸ்மாக் கடைகள் அகற்ற உத்தரவு வழங்கிய தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு  அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவித்து அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுகந்தி விநோதினி கடிதம் அனுப்பி உள்ளார் அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை பெயரில் மக்கள் பள்ளி மாணவர்களுக்கான சமூக முன்னேற்ற பணிகளில் பல ஆண்டு ஈடுபட்டு வருகிறேன் இந்த வகையில் எனது 22 வது வார்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தின் அருகில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன இதனால் பேருந்து பயணிகளுக்கும் கல்லூரி பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தாய்மார்களுக்கும் குடி பிரியர்களால் தொல்லைகள் அதிகரித்து வந்தன இதனை தடுத்திட தாசில்தார் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் வரையில்  பல மனுக்கள் கொடுத்திருந்தேன் ஆனால் பயனில்லாமல் இருந்து வந்தது இந்த நேரத்தில் தாங்கள் முதல்வராக பதவி ஏற்ற பின் 717 கடைகளை அகற்ற உத்தரவிட்டிருந்தீர் அதன் பயனாக அரக்கோணத்தில் பேருந்து நிலையத்தில் இருந்த கடைகளும் அதிரடியாக மூடப்பட்டன இந்த செய்தி வார்டு மக்களுக்கும் நகர மக்களுக்கும் பெரிதும் மகிழ்ச்சி தந்தது எனவே தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க அறக்கட்டளை சார்பில் வாழ்த்துகிறேன் நன்றி தெரிவிக்கிறேன் இவ்வாறு கூறியிருந்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!