அரக்கோணத்தில் டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு புரட்சி தேசிய கழகம் சார்பில் மாலை அணிவித்து மே தின விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் தலைமை இடமாகக் கொண்டு புரட்சி தேசிய கழகம் செயல் பட்டு வருகிறது இந்த கழகத்தின் சார்பிலும்

தமிழக டாக்டர் .அம்பேத்கர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் இணைந்து அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மே தினம் கொண்டாடினர் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கபீர் அகமது வரவேற்றார் விபூஷ்ணன் மற்றும்

தியாகி சின்னையா முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சிக்கு

புரட்சி தேசிய கழகம் நிறுவனத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கி அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து பேசியபோது

அரக்கோணம் ABM நகர் மற்றும் ஜெய்பீம் நகரில் வசிக்கும் அருந்ததியர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் அரக்கோணம் வட்டம், மாங்காட்டுச்சேரி ஆணைப்பாக்கம் , மற்றும் மிட்டப்பாளையம் ஊராட்சிகளில் வசிக்கும் அருந்ததியர்களின் பஞ்சமி நிலம் மற்றும்  பயிர் செய்து வரும் நிலங்களை மீட்டு தர வேண்டும் என அரசிற்கு கோரிக்கை விடுத்து பேசினார் இந்த நிகழ்ச்சியில் டெல்லி பாபு தினேஷ் முனுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!