குடியாத்தத்தில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றகண்டன ஆர்ப்பாட்டம்!!


தமிழகத்தில் . 2026 பொது . சட்டமன்றத் தேர்தலில் 108. சட்டமன்றத் . தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக பொறுப்பு . ஆளுநரை கண்டித்து குடியாத்தம் புதிய.பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார் பொருளாளர் இலியாஸ் பாஷா துணைத் தலைவர் விஜயேந்திரன் பொது செயலாளர் சரவணன் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

குடியாத்தம் கிழக்கு நகர காங்கிரஸ் தலைவர் லாலாஜாபதி வரவேற்றார் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் கிருஷ்ணவேணி மாவட்ட துணை தலைவர் சேகரன் குடியாத்தம் தெற்கு வட்டாரத் தலைவர் ஜோதி கணேசன் மாவட்ட பொது செயலாளர் பாரத் நவீன் குமார். தகவல் தொழில்நுட்ப பிரிவு எம்கே யுவராஜ். ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இதில் கோமதி குமரேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வீராங்கன் நன்றி கூறினார். 

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!