நிலவன் டிவியின் தலைப்புச் செய்திகள்!!
📰 முதலமைச்சரின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்று வேலை என விவசாய சங்கங்கள் குற்றச்சாட்டு.. பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தல்
📰 தமிழ்நாட்டில் குதிரை வேகத்தில் குதிரை பேரம் நடைபெறுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.. தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள் ‘துயரசக்தியாக அம்பலப்பட்டுள்ளதாக விமர்சனம்
📰 அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயகுமார், சத்தியபாமா ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா.. மூவரின் உருவப்படங்களை எரிக்க முயன்று அதிமுகவினர் போராட்டம்
📰 கள்ளக்குறிச்சி அருகே 48 மணி நேரமாக மின்சாரம் வழங்கப்படாததை கண்டித்து மக்கள் சாலை மறியல்.. மின்வாரிய அதிகாரிகள் செல்போனை அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
📰 கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்.. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நடந்த கத்திக்குத்து சம்பவத்தால் அதிர்ச்சி...
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக