நடு ராத்திரியில் கோவை அரசு மருத்துவமனையில் ரெய்டு நடத்திய அமைச்சர்!!

கோவை மாவட்டம்,நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர். சம்பத்குமார்.

கோவை: தவெக ஆட்சியமைத்து 3 வாரங்களாகிவிட்டன. அமைச்சர்கள் அவரவர் சார்ந்த துறைகள், மாவட்டங்களில் சர்ப்ரைஸ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில்களில் மாறுவேடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆய்வு செய்தார். மருத்துவர்கள், பணியாளர்கள் சரியாக பணி செய்கிறார்களா, மருத்துவமனைக்கு வருகிறார்களா, சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என்பதை பல்வேறு பிரிவுகளுக்கு சென்று சுமார் 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா ? என ஆய்வு செய்தார். நள்ளிரவு டிஷர்ட் அணிந்தபடி மருத்துவமனையில் சர்ப்ரைஸ் ரெய்டு மேற்கொண்டார்.  மக்கள் பணி தொடரும் .

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!