நத்தம் அருகே நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள உலுப்பகுடியில் மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதில் கடந்த மாதம் 23-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் தோரணமரம் ஊன்றுதலை தொடர்ந்து புதன்கிழமை இரவு தீவட்டி பரிவாரங்களுடன், வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்த ஊர்வல அம்மன் மேளதாளம் முழங்க கோயில் முன் உள்ள மந்தைக்கு சென்றது. பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து வியாழன்கிழமை காலையில் பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி, பூத்தட்டு, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின்னர் மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக