தமிழக முதலமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்!!
பதவியேற்பு விழா முடிந்த கையோடு, தமிழகத்தின் புதிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு வருகை தந்து, தனது இருக்கையில் அமர்ந்து முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்குத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மலர்க்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கோட்டைக்கு வந்த விஜய்க்கு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த அவர், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது மக்கள் பணியைத் தொடங்கினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக