திருச்சியில் மரணம் அடைந்த மாணவி சீதா லட்சுமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் கீரனூர் அருகே மணக்குடி பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு= கலைச்செல்வி. இவர்களின் மகள் சீதாலட்சுமி அவர்கள் திருச்சியில் உள்ள அரசு செவிலியராக அரசு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மூக்கில் சதை வளர்ந்து இருந்ததால் 

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

மூக்கில் தவறான இடத்தில் சதை வளர்ந்துள்ளதால் அதை ஆபரேஷன் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தலின் அடிப்படையில் சீதாலட்சுமி அவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார். 

அறுவை சிகிச்சைக்கு முன்பாக சீதாலட்சுமிக்கு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததின் விளைவாக சீதாலெட்டனசுமியின் உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

பாதிக்கப்பட்ட சீதாலட்சுமி குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 

முதல் கட்டமாக ரூபாய் 7 லட்சம் நிவாரண நிதியும். சீத்தாலட்சுமியின் 

தாய் கலைச்செல்விக்கு ஒருஏர்ஸ் இலவச வீட்டு மனை பட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சீத்தாலட்சுமியின்

ஒரே சகோதரியான புவனேஸ்வரிக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்

முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தற்காலிக

தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிஆனை வழங்கி உள்ளது போதுமானதல்ல.

அரசு மருத்துவரின் கவனக்குறைவால் இறந்து போன சீதாலெட்சுமி குடும்பத்திற்கு இந்த அறிவிப்புகள் எந்த விதத்திலும் ஈடு செய்ய முடியாது.

எனவே கீழ்காணும் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதாலெட்சுமி குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை இழப்பீடை நியாயத்தை வழங்குவதற்கான கோரிக்கைகளை முன் வைக்கிறது.

சீதாலெட்சுமி குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய். 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

சீதாலெட்சுமி தாயார் கலைச்செல்வி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இலவச  1 ஏர்ஸ் பட்டா இடத்தில் 

 தமிழ்நாடு அரசு முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

சீதாலட்சுமியின் ஒரே சகோதரியான புவனேஸ்வரிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆன வேலை என்பதை மாற்றி புவனேஸ்வரிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தகுதியின் அடிப்படையில் நிரந்தரமான பணி ஆணை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சி அரசு மருத்துவரின் கவனக்குறைவால் இறந்து போன சீதாலட்சுமியின் குடும்பத்தினரை புதுக்கோட்டை மாவட்டம் மணக்குடி பட்டியில் சிபிஐ(எம்) புதுக்கோட்ட மாவட்ட செயலாளர் தோழர் எஸ் சங்கர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்.தோழர் க.சண்முகம்..குன்றண்டார் கோவில் ஒன்றிய செயலாளர் தோழர். எஸ். கலைச்செல்வன்.விராலிமலை ஒன்றிய செயலாளர் தோழர் என் மகாலிங்கம். மாவட்டக்குழு உறுப்பினர்கள். எம்.ஆர்.சுப்பையா.எஸ். பெருமாள். விராலிமலை ஒன்றியக்குழு உறுப்பினர்.அ. இருதயம்.விதொச. மாவட்ட துணைத் தலைவர். எம். சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். 

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!