வேளாங்கண்ணிக்கு விஜய் இன்று வருவார் என்று பரவிய தகவலால் நீண்ட நேரம் காத்திருந்த ரசிகர்கள்!!

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர். விஜய் இன்று வருவார் என்று பரவிய தகவலால், 

அதிகாலை 3 மணி முதலே ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் அங்கு குவியத் தொடங்கினர். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்தும் விஜய் வராததால் ஏமாற்றமடைந்த அவர்கள், ஆலய வளாகத்தில் 'தவெக தவெக' என்று முழக்கமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்களின் இந்த தொடர் கோஷங்களால் பேராலயத்தில் நடைபெற வேண்டிய அதிகாலை திருப்பலி பூஜை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதுடன், அங்கு வந்திருந்த மற்ற பக்தர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!