மதுரை கிழக்கில் தவெக வெற்றி – பொதுமக்களுக்கு சோ. கார்த்திகேயன் நன்றி தெரிவித்தார்!!

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சோ. கார்த்திகேயன், ஒத்தக்கடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

விசில் சின்னத்திற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த அவர், மக்களின் நம்பிக்கைக்கும் மாற்றத்திற்கான தீர்மானத்திற்கும் கிடைத்த வெற்றி  எனக் கூறினார்.

மேலும், தேர்தல் காலத்தில் உறுதுணையாக இருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தொகுதி வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்றும் உறுதியளித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!