நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

🗞️ முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் உள்துறை, காவல், பொது நிர்வாகம் உள்ளிட்ட 16 துறைகள். சிறப்புத்திட்டங்கள் அமலாக்கம், பெண்கள் நலம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையையும் விஜய்யே கவனிப்பார்.

🗞️ ஆனந்துக்கு ஊரக வளர்ச்சித்துறை, ஆதவ் அர்ஜூனாவுக்கு பொதுப்பணி, விளையாட்டு மேம்பாட்டுத் துறைகள் ஒதுக்கீடு. அருண்ராஜ்க்கு சுகாதாரத்துறை ஒதுக்கீடு செய்து உத்தரவு.

🗞️ செங்கோட்டையனுக்கு நிதித்துறை, ராஜ்மோகனுக்கு பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு. நிர்மல்குமாருக்கு மின்சாரத்துறை, சட்டம், கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்து உத்தரவு.

🗞️ அதிமுக விவகாரத்தில் உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் உறுதி.

🗞️ சபாநாயகர் முடிவு எடுக்க தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம். எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.பி. தனபால் பேட்டி.

🗞️ தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக கனமழை. வெயிலின் தாக்கம் குறைந்தததால் மக்கள் மகிழ்ச்சி

🗞️ கோடை மழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு.

🗞️ குஜராத்தில் அமைகிறது இந்தியாவின் முதல் அதிநவீன செமிகண்டக்டர் ஆலை. நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.

🗞️ ராஜராஜ சோழன் காலத்து செப்பேடுகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்த நெதர்லாந்து அரசு. 30 கிலோ எடையில் 21 பக்கங்கள் கொண்ட செப்பேடுகள் ஒப்படைப்பு.

🗞️ கீழடி அகழாய்வில் முதன்முறையாக கிடைத்த முழுமையான வட்டப்பானை. தட்டையான வடிவமைப்புடன் பார்க்க வித்தியாசமாக உள்ள பானையின் பயன்பாடு குறித்து ஆய்வு.

🗞️ CBSE பள்ளிகளில் ஒன்பது மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கட்டாய மும்மொழி பாடத் திட்டம். வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவு.

🗞️ வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி ஒன்றிய அரசின் அனுமதி கட்டாயம். புதிய கட்டுப்பாடுகளால் வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம்.

🗞️ ராசிபுரம் அருகே  ஒடிசா, பீகார் மாநில தொழிலாளர்களிடையே கைகலப்பு. உருட்டுக்கட்டைகளை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.

🗞️ மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் விமரிசையாக நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் சூடம் ஏற்றி வழிபாடு.

🗞️ நெல்லையில் வீட்டு வாசலில் வைத்து பெண் வெட்டிக்கொலை. இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் வெறி செயல்

🗞️ ஆந்திராவில் தம்பதிகள் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை. நான்காவது குழந்தை பெற்றுக் கொண்டால் 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு பேச்சு.

🗞️ கேரளத்தின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் சதீசன். முதலமைச்சர் போட்டியில் இருந்த ரமேஷ் சென்னிதலாவுக்கு உள்துறை ஒதுக்கப்படும் என தகவல்.

🗞️ இளைஞர்களை கரப்பான் பூச்சி, ஒட்டுண்ணிகள் என பேசவில்லை. தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி விளக்கம்.

🗞️ தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு. சிக்னலுக்காக நின்றிருந்த பேருந்து மீது மோதிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.

🗞️ தென்கொரியாவில் விளக்குத் திருவிழாவை நடத்திய துறவி ரோபோக்கள். சியோல் நகரத்தில் ஊர்வலமாக சென்ற ரோபோக்களை கண்டு வியந்த மக்கள்.

🗞️ ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அசத்தல். வெற்றியின் மூலம் பிளே ஆஃப் நம்பிக்கையில் நீடிப்பதால் எதிர்பார்ப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!