நீட் தேர்வு ரத்து செய்ய கோரி நெமிலியில் தி.க ஆர்பாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பஸ் நிலையத்தில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு பு. எல்லப்பன் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார். சு.லோகநாதன் சொ.ஜீவன் தாஸ் முன்னிலை வகித்தனர். கசு.பெரியார் தேசன், செ. கோபி, ஏ. சு. ராஜா, இராவணன், கெ.ஆறுமுகம், முனைவர். கலைநேசன், தருமன், பேராசிரியர். வீரமணி, கோ.சூரியகுமார், போ.பாண்டுரங்கன், பொள். வெங்கடேசன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். பளஸ் 2 படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் டாக்டர் படிப்பிற்கு அனுமதிக்க வேண்டும் இதற்கு குறுக்கு ஈடாக உள்ள நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக