நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
🔹 சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கோடை மழை. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைக்குப் பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி.
🔹 தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததால், சிரமம் அடைந்த மக்கள். அதிகபட்சமாக திருச்சியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
🔹 சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், வெயில் காலங்களில் வேதனையில் உழலும் டெலிவரி ஊழியர்கள். மழைக் காலத்தைப் போல, கடும் வெயிலிலும் சிறப்புத் தொகை வழங்க ஆன்லைன் செயலி நிறுவனங்களுக்கு கோரிக்கை.
🔹 தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இரவில் மின் வெட்டு தொடருவதால், மக்கள் போராட்டம். புதுக்கோட்டை அரசு அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போதே மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு.
🔹 டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை 2028 ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்படும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டுமென எழுந்துள்ள கோரிக்கை.
🔹 தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம். தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்.
🔹 தென்காசி, நெல்லை மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில், தெருக்களில் நின்ற மக்களை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல். இருசக்கர வாகனங்களில் வந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலா என அறிய, 4 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை.
🔹 டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் முடிந்து கடைகள் திறக்கப்பட்டதால் அலைமோதிய கூட்டம். தனியார் பார்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் வாங்கியதாக மதுகுடிப்போர் வேதனை.
🔹 தமிழ்நாடு முழுவதும் 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அரசு தகவல். ஒரு வாரத்தில் 431 குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 155 குவாரிகள் விதிமீறல்கள் கண்டுபிடிப்பு.
🔹 வடலூர் அருகே பாதி புதைந்த நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம். திருமணத்தை மீறிய உறவை தொடர வற்புறுத்தியதால், கொலை செய்த ஆண் நண்பர் கைது.
🔹 கடலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா எனவும் கேள்வி.
🔹 சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணியை கோயெம்ப்ட் நிறுவனத்திற்கு கொடுத்ததில் முறைகேடு. 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் தகுதியில்லா நிறுவனத்திடம் தரப்பட்டதாக ராகுல் ஆவேசம்.
🔹 சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியிட்ட மாணவர். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அம்பலப்படுத்தியதாக 17 வயது மாணவருக்கு ராகுல் பாராட்டு.
🔹 இருமொழிக் கொள்கையே நமது மாணவர்களின் DNA-வில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கையே தொடரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி.
🔹 மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம். த.வெ.க. அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தல்.
🔹 தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மாணவர் சேர்க்கை அறிவிப்பு. ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைக்கு ஜூன்15, முதுகலை தமிழ் பட்டப் படிப்பிற்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
🔹 இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மூன்றரை சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த முயற்சி. முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் எடுத்துரைக்கப்படும் என அமைச்சர் ஷாஜகான் உறுதி.
🔹 தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் இரவில் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என புகார். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுக்காக, பணிமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட பேருந்து.
🔹 சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலர் பணி நீக்கம். சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் நடவடிக்கை.
🔹 குழந்தைகளை பரப்புரைக்கு பயன்படுத்திய புகாரில் தவெக பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தன் பேரன் விஜய்க்கு வாக்களிக்கக் கூறியதாக நீதிபதி கருத்து.
🔹 தேனியில் தவெக மகளிர் அணி பொறுப்பில் இருப்பதாகக் கூறி அரசு அலுவலகங்களில் ஆய்வு. கட்சி பெண் பிரமுகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாவட்ட செயலாளர் எச்சரிக்கை.
🔹 அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு. கச்சா எண்ணெய் விலை 6 வாரங்களில் இல்லாத அளவுக்கு 2 சதவீதம் குறைந்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக