நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!
🗞️ மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் நேரில் வலியுறுத்தல். இலங்கை சிறையில் உள்ள 58 மீனவர்களையும் விடுவிக்க கோரிக்கை.
🗞️ எடப்பாடி பழனிசாமியுடன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீர் சமரசம். ஒருங்கிணைந்த அதிமுகவாக செயல்படுவோம் என வேலுமணி அறிவிப்பு.
🗞️ சி.வி.சண்முகத்துடன் அதிமுகவினர் நடத்திய சமாதான பேச்சுவார்த்தை தோல்வி. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஆவேசத்துடன் புறப்பட்ட சி.வி.சண்முகம்.
🗞️ அதிமுகவில் பிளவு இல்லை, கருத்து வேறுபாடு மட்டுமே நிலவியதாக எஸ்.பி.வேலுமணி விளக்கம். சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஒற்றுமையாக இருந்து ஆராய உள்ளதாகவும் பேட்டி.
🗞️ நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம். பொது இடங்களில் மாடுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக