முத்துப்பேட்டை அருகே கை, கால் கட்டப்பட்டு முழுவதும் எறிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி தர்காசு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் எலி பிடிப்பதற்காக அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். அப்போது தோனி வாய்க்கால் மற்றும் ராமசாமி என்பவரது வயலுக்கும் இடையில் உள்ள வரப்பு கரையில் எரிந்த நிலையில் தலை மற்றும் கால்கள் எலும்பு கூடாக ஒரு சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த சிறுவர்கள் கிராமத்துக்கு வந்து மக்களிடம் கூறினர். இதனையடுத்து அங்க நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடினர்.

இதனையடுத்து கிராம மக்கள் எடையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை ஏஎஸ்பி நீல் ஷர்மா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை முத்துக்குமரன், எடையூர் சுகுணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் எரிந்து கிடந்த சடலத்தில் தாலி கயிறு எரிந்த நிலையில் இருந்ததால் பெண் சடலம் தான் என்பது உறுதி செய்தனர். மேலும் சடலம் கை கால் கட்டப்பட்டு எரிக்கப்பட்டு இருப்பது போல் தெரியவந்துள்ளது.

மேலும் சடலம் அருகே பட்டுக்கோட்டை முகவரி கொண்ட ஒரு நகைக்கடையில் வழங்கப்பட்ட கை பேக் ஒன்றும், அதில் ஒரு சீப்பு, குங்குமம் டப்பா இருந்துள்ளது. அதேபோல் இன்னும் சற்று தூரத்தில் பெட்ரோல் எடுத்து வரப்பட்ட ஒரு வாட்டர் பாட்டிலும் அதன் அருகே சிகரெட் பாக்கெட் ஒன்றும் கிடந்தது. இதனை பார்க்கும்போது யாரோ மர்ம நபர்கள் பெண்ணைக் கொன்று கை கால் கட்டப்பட்டு சாக்கு முட்டையில் எடுத்து வந்து மக்கள் யாரும் செல்லாத பகுதியான கிராமத்துக்கு அப்பால் உள்ள இந்த வயல் பகுதிக்கு கொண்டு வந்து அதனை எரித்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

மேலும் அதே பகுதியில் அறுவடை செய்யப்பட்டு சிதறி கிடக்கும் வைக்கோல்களும் ஆங்காங்கே எரிக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. மர்ம நபர்கள் மக்களுக்கு சந்தேகம் வர கூடாது என்பதற்காக உடலை எரிக்கும்போது இந்த வைக்கோலை எரித்துருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் 15 தினங்களுக்கு மேல் நடந்திருக்க கூடும் என்றும் இவர் யார்? இவரின் வயது என்னா? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை செய்யப்பட்ட உடலை எப்படி கிராம மக்கள் கண்ணில் படாமல் இங்கு எப்படி கொண்டுவரப்பட்டது? அல்லது கொலையாளிகள் இதே பகுதி சேர்ந்தார்களா? இல்லை இளம்பெண்ணை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கொலை செய்து எரித்தார்களா? என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எரிக்கப்பட்ட உடலின் பாகங்களை போலீசார் சேகரித்து மூட்டை கட்டி அங்கிருந்து கிராமத்திற்கு கொண்டு வந்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனக்கு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முத்துப்பேட்டை ஏஎஸ்பி நீல் ஷர்மா தலைமையில் ஒரு தனிப்படையும் அதேபோல் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானிஹா தலைமையில் ஒரு தனிப்படையும் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் அவர்கள் திருவாரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.

மோப்ப நாய் கிராமத்தில் பல்வேறு பகுதிக்கு ஒடி சென்று வந்தது இன்னும் துப்பு கிடைக்க வில்லை. இந்தநிலையில் இச்சம்பவம் சுற்றுப்புற பகுதிக்கு பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!