தேர்தலுக்கு பிறகு கூட்டணியை காப்பாற்றும் வலிமை இல்லை - திருமாவளவன்!!

தேர்தலுக்கு முன், என்னை துருப்புச் சீட்டாக பயன்படுத்தி திமுக கூட்டணியை சிதறடிக்க பல முனைகளில் இருந்தும் முயற்சித்தனர்.

ஆனால் திமுக கூட்டணியை பலவீனப்படுத்தவிடமாட்டேன் என உறுதியாக நின்று அதனை நடத்தியும் காட்டினேன்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்த எனக்கு வலிமை இல்லை. IUML நிலைப்பாட்டில் நான் தலையிட முடியாது.

ஆனால் சமூக வலைதளங்களில் என்னை மட்டும் குறிவைத்து அவதூறு கணைகளை ஏவுவது ஏன் என்று தெரியவில்லை.

நானே அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்து வந்தபோது நான் அதற்கு இணங்கவில்லை.

அமைச்சரவையில் இடம்பெறுவது உறுதிபடுத்தப்பட்டபோது வன்னி அரசை பரிந்துரைப்பதே சரி என முடிவு செய்தேன்.

தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை.

தேர்தல் நேரத்தில்தான் யாருடன் பயணிப்பது, கூட்டணி என்பது குறித்த முடிவுகளை எடுப்பது வழக்கம்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக என்னாலான முயற்சிகளை செய்தேன்.

– விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!