கஞ்சா செடியை சாமியாக கும்பிடுறேன், கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு? கேள்வி கேட்ட தவெக இளைஞர்!!

கஞ்சா செடி வளர்த்தால் என்ன தப்பு நான் சாமி கும்பிடத் தான் வைத்திருக்கிறேன் என  தவெக ஆதரவாளர் கூறியதால் போலீசார் அதிர்ச்சி!

சென்னை: புது வண்ணாரப் பேட்டை வ. உ. சி. நகர் பகுதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்து வரும் இளைஞர்  ஒருவர் வீட்டின் பால்கனியில் கஞ்சா செடி வளர்ப்பதாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையர்  தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில்

அந்த நபரின் வீட்டிற்கு சென்று பால்கனிக்கு அழைத்துச் சென்று இது என்ன செடி என்று கேட்டவுடன்

இது கஞ்சா செடி என போலீசாரிடம் ஒப்புக்கொண்டு அந்த நபர்

இதை வளர்ப்பதினால் என்ன தப்பு? நான் சாமி கும்பிட தான் வளர்த்து வருகிறேன் நான் தினந்தோறும் இந்து செடிக்கு பூஜை செய்வேன் எனக் கூறியவுடன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்

சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி  கழகத்திற்காக வேலை செய்ததாகவும் அதன் அடையாளமாக தனது வீட்டில் தவெக கட்சி கொடியை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

கஞ்சா செடி பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளாரா கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளாரா என போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!