நிலவன் டிவி இன்றைய தலைப்புச் செய்திகள்!!

24 மணிநேரத்தில் நாட்டு நடப்பு:

✦தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்திற்கு ரூ.1000 வங்கி கணக்கில் வரவு

✦ "முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. PM மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது CM விஜய்யின் ஜாதகம். இன்னும் 30 - 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார்.." -ராதன் பண்டிட் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி

✦திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு. முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்த நிலையில் தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

✦கூட்டுறவு பால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு டிஜிபியாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

✦நாகையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 கொலை - விசாரணை

✦"அஜித் சாருக்கும் CM யோகம் இருக்கு. ஆனால் CM விஜய்யின் ஜாதகம் படி அஜித் சார் போட்டிக்கு வரமாட்டார். விஜய் சார் போட்டியே இல்லாத பிரதமர் ஆகும் யோகம் கூட இருக்கு. 100 வருடம் கடந்து வாழ்வார்.." -ராதன் பண்டிட் 

✦"இப்ப நம்மளை பார்க்குற எல்லாருமே, எப்படியும் திமுகதான் ஜெயிக்கும்னு நினைச்சோம். அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு அவங்களுக்கு தெரியாம போட்டுட்டோம்னு புலம்புறாங்க" - திமுக மா.செ. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

✦“கருப்பு திரைப்படத்தின் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்“ - தயாரிப்பு நிறுவனம்

 ✦"பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை ஒன்றிணைந்து முறியடிப்போம். ஆளும் அரசின் ஆசை வார்த்தைகளுக்காக எம்எல்ஏக்கள் சிலர் ஆதரவு. பதவி சுகத்திற்காக கட்சியை அழிக்க துணிந்து உள்ளனர். 

✦"அமைச்சரவையில் காங்." "தவெக அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸ்க்கு அழைப்பு. அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதி. 

✦"முதல்வர் பதவிக்காக நான் காத்திருக்கவில்லை. நான் முடிவை அறிவிக்க காலம் தாழ்த்தியது அதற்காகதான் என்று அவதூறுகளை வாரி இறைக்கிறார்கள். இடதுசாரிகளின் முடிவுக்காகவே காத்திருந்தேன்" 

✦6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி மும்பை வெற்றி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!