ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எஸ் . பி வேலுமணி வருத்தம்!!

கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும் காட்சி மாறல" - தவெக அரசு மீது முதல்முறையாக SP வேலுமணி விமர்சனம் கோவை "கோவை சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என உறுதி செய்ய வேண்டும்" என அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை சிறுமி கொலை விவகாரத்தில் தவெக அரசை சாடியுள்ளார் எஸ்பி வேலுமணி.கோவை சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. மோட்டார் சைக்கிளில் 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் அந்தச் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. ஆட்சி மாறினாலும் இம்மாதிரி கொடுமைகள் மாறவில்லை என எஸ். பி. வேலுமணி வருத்தம் தெரிவித்தார்.

கொங்கு மண்டல செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!