குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்டாட்சியர். பிரியா தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைந்த வேளாண்மை உதவி இயக்குனர். உமாசங்கர் முன்னிலை வகித்தார்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர். ரேவதி . வரவேற்றார்.
இக்கூட்டத்தில் விவசாயி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
சின்ன தோட்டாளம் குடியிருப்பு பகுதியில் உயர் மின்னழுத்தம் கம்பிகள் செல்வதால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் உள்ளது மின்சார வாரியம் அதை மாற்றி அமைக்க வேண்டும்.
உள்ளி . மற்றும் கோப்பம்பட்டி வரை முதலமைச்சர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார்.1.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை . முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை மேலும் தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அகரம் சேரி பகுதியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 150 ஏக்கர் நிலத்திற்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் விட வேண்டும்.
அகரஞ்சேரி பள்ளி அருகே உள்ள டாஸ்மார்க் கடையை அப்புறப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர். ராமலிங்கம் நகர அமைப்பு அலுவலர். சீனிவாசன் வளத்தூர் வருவாய் ஆய்வாளர். புகழரசன் விவசாய சங்கப் பிரதிநிதிகள். சாமிநாதன், துரை, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் தலைமை விடத்து துணை வட்டாட்சியர். தனலட்சுமி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக