ஓறையூர் பலாபட்டு திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா!!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி வட்டம், ஒறையூர், பலா பட்டு பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தீமிதி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தன.
விழாவை முக்கிய நிகழ்வாக நேற்று மாலை தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதளுக்களுக்காக தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஒறையூர் பலாபட்டு ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராமானோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக