கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!

 



கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு கைத்தறி நெசவாளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் காப்பீடு திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு, உள்ளிட்ட அத்தியாவசிய காப்பீடுகள், இலவசமாக சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் நிறுவனர் கைத்தறி முருகேசன், பங்குதாரர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காப்பீட்டு திட்டத்தில் பயணடைந்த அனைவரும், இலவசமாக காப்பீடுகளை  வழங்கிய சில்க் வில்லேஜ் கைத்தறி நிறுவனத்திற்கு கைத்தறி  நெசவாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை செய்தியாளர் பட்டுராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!