அழகர் கள்ளழகர் ஆன கதை!!

மதுரையில் சித்திரை திருவிழா இனிதே முடிந்து. அழகர் அழகர் கோயில் சென்றடைந்தார். அங்கு அருள் புரியும் பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கு ஒரு காரணம் உள்ளது கள்ளர் நாட்டு எல்லையில் உள்ள தேனூரில் தான் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் காலம் தொட்டு நடந்து வந்தது சமய ஒருமை பாட்டுக்காக திருமலை நாயக்கர் மன்னன் அந்த வைபவத்தை மதுரைக்கு மாற்றினார் அப்போது கள்ளர் சமூகத்தினர் தங்கள் ஆண்ட ஆண்டுகால உரிமையை விட்டுத் தர முடியாது என பிரச்சனை செய்தனர் அவர்கள் உடன் பேசி ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது அழகர் கள்ளழகர் ஆக திருமாலுக்குரிய சக்கரத்தை நீக்கிவிட்டு கள்ளர்களின் வீர ஆயுதமான வளரியை வலது கையிலும் இடது கையில் சாட்டை கம்பும் ஆண்களின் போர் கருவியான தொண்டை உருமாள் மற்றும் காதில் கடுக்கன் காங்கு எனப்படும் கருப்பு உடை இவை எல்லாம் அணிந்து கள்ளழக உருவம் கொண்டு மதுரை வரவேண்டும் அதுவும் குதிரை வாகனத்தில் வர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கு இணங்க இன்று வரை அழகர் கள்ளழகராக மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் தொன்று தொட்டு நடந்து வருகிறது வளரி என்பது கள்ளர் சமூகத்தில் பாரம்பரியமாக உபயோகிக்கும் ஆயுதம். திருமணத்தின் போது   தங்கள் வளரிகளை மாற்றிக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது இவ்வாறு திருமால் வேறெங்கும் இல்லாத வகையில் கள்ளழகர் வேடமிட்டு காட்சி தருவது மிகச் சிறப்பானது. இத்திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடமிட்டு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை கள்ளழகர் வேடமிட்டு வருவது வழக்கம்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!