சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா? உதயநிதி ஸ்டாலின்!!
கடலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண்படைனு பேரையும், UNIFORM-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா?
தமிழ்நாடு தாங்காது!“நீங்க Time எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக