காரைக்குடி செட்டிநாட்டு சீர்வரிசை!!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செட்டிநாடு பகுதியில் சீர்வரிசை பரப்புதல் என்பது ஒரு பாரம்பரிய நிகழ்வாக இன்றும் நடந்து வருகிறது மணப்பெண்ணுக்கு வழங்கும் சீர்வரிசை பொருள்கள் உலோகம் மற்றும் மரத்தினால் ஆன சீர்வரிசை பொருள்கள் ரகம் வாரியாக பிரித்து அடுக்கி வைக்கப்பட்டு திருமணத்திற்கு வந்திருப்போர் பார்வைக்கு வைக்கப்படுவது ஒரு பாரம்பரிய நிகழ்வாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
வெள்ளி சாமான்கள் வெங்கல சாமான்கள் எவர்சில்வர் பாத்திரங்கள் மர சாமான்கள் பிளாஸ்டிக் பொருள்கள் ஆடை பிரிவுகள் நவீன எலக்ட்ரிக் பொருட்கள் கல்லால் ஆன பொருட்கள் இவ்வாறாக ரகம் வாரியாக பிரித்து அழகுபட அடுக்கி வைப்பர்
வெள்ளிப் பொருள்கள்:
வெள்ளியில் குடம் சங்கு, சாப்பிடும் தட்டுகள் குத்துவிளக்கு மாவிளக்கு
சட்டி தண்ணீர் குவளை டம்ளர் காமாட்சி விளக்கு பன்னீர்
செம்பு சந்தன பேலா செட் நகை பெட்டி மருந்து ஊற்றும் சங்கு தாம்பூலம் தட்டு இவ்வறாக பல பொருள்கள் ஒரு பகுதியில் அடுக்கி வைத்திருப்பர்
வெங்கல பொருட்கள் :
காசி அண்டா ஐந்து அடுக்கு அண்டாக்கள் தெக்கலூர் தவளைகள் குடம் போன்றவை 21 அல்லது 51 என்ற கணக்கில் அடுக்கி வைப்பர். கோழி வாளி சட்டி ஜவ்வாரி சட்டி அன்னக்கூடை சட்டி சீவுகுடம் மது குடம் 21 குழி இட்லி சட்டி குத்துவிளக்கு சீவு விளக்கு எச்சில் பணிக்கர் அடுக்கு கேரியர் தூக்குவாளி போன்ற பலவிதமான பாத்திரங்கள் அந்த சீர்வரிசையில் இடம்பெறும். இதே போல் எவர்சில்வர் பாத்திரங்களும் சமையலறைக்கு தேவையான அனைத்து வகையான பொருட்கள் இடம் பெறும்
மர சாமான்கள் :
மரத்தினால் ஆன பீரோ கட்டில் பிள்ளைத் தொட்டில் கண்ணாடி டேபிள் நெல் உரல் உலக்கை சமையலறை சாமான்கள் பெட்டி போன்றவை விதவிதமாக அந்த சீர்வரிசையில் இடம் பெறும்
ஆடைகள் :
செட்டிநாடு பாரம்பரிய கண்டாங்கி சேலைகள் பட்டுச்சேலைகள் மற்றும் அனைத்து ரக ஆடைகளும் சீர்வரிசையில் அடங்கும்
செட்டிநாட்டு திருமணங்கள் பல சம்பிரதாயங்களுடன் வெகு விமர்சையாக செய்யப்படுகிறது அதில் சீர் பரப்புதல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகவும் கௌரவத்தை பறைசாற்றும் ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது திருமண விருந்து என்று பார்த்தால் விதவிதமான பலகாரங்களுடன் அனைத்து வகை காய்கறிகளும் பரிமாறப்படும் அந்த உணவுக்கே ஒரு தனி விசேஷம் உண்டு இவ்வாறு பலவகை பாரம்பரியங்களையும் இன்றும் தொடர்ச்சியாக கடைபிடித்து வரும் இப்பகுதி மக்களின் விருந்தோம்பல் என்பது அன்று முதல் இன்று வரை சிறப்புடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்
கருத்துரையிடுக