வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டாட்சியர் மர்மமான முறையில் உயிரிழப்பு போலீசார் விசாரணை!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல். பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரின் மகன் பலராமன் வயது 41 இவர் . கே வி குப்பம் வட்டாட்சியர் ஆக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் ரித்திக் வயது 10 ஜாதவ் வயது 8 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் .8.. மணி அளவில் வீட்டில் முகத்தில் காயங்கள் உடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் காயங்கள் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர் . பின்பு உடனடியாக பலராமனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனயில். சேர்த்தனர் அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் எர்தாங்கல் கிராமத்தில் குவிந்தனர்.பின்பு குடியாத்தம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும். கிராமிய காவல் ஆய்வாளர் பொறுப்பு பிரபு. மற்றும் போலீசார் மேற்படி கிராமத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது சம்பந்தமாக குடியாத்தம் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக பலராமன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்று தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர் தாசில்தார் தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்
கருத்துரையிடுக