நிலவன் டிவியின் இன்றைய தலைப்புச் செய்திகள்!!

🔹 இன்று காலை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். இணையதளம் மற்றும் செல்போனில் அறிந்து கொள்ள ஏற்பாடு.

🔹 ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து மருந்து விற்பனையாளர்களை இன்று வேலைநிறுத்தம். தமிழ்நாட்டில் மட்டுமே 42,000 மருந்தகங்கள் மூடப்படும் ஆபத்து.

🔹 காரீப் பருவத்திற்கான உரங்களை தடையின்றி வழங்க பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம். யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் உடனடியாக கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தல்.

🔹 அதிமுக ஆதரவை தவெக பெற்றால் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம் என பெ.சண்முகம் எச்சரிக்கை. அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் தருவது மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்றும் அதிரடி.

🔹 எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து. தவெக பரப்புரை குறித்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி பதிவு.

🔹 அதிமுக தன் பக்கம் உள்ளதை நிரூபிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டிய பழனிசாமி. பதவிக்காக கட்சியின் மூத்த நிர்வாகிகளே துரோகம் செய்து விட்டதாக வேதனை. 

🔹 தவெக உடனான கூட்டணியை பழனிசாமி உதாசீனப்படுத்தி விட்டதாக சி.வி.சண்முகம் மீண்டும் குற்றச்சாட்டு. தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க எடப்பாடி தவறி விட்டதாகவும் புகார்.

🔹 எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் ஒரு மாவட்ட செயலாளர் நீக்கம். பெரம்பலூர் மாவட்டச் செயலாளரை மாற்றி எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

🔹 நிதியமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த தேடப்படும் குற்றவாளி. 300 கோடி ரூபாய் மோசடி செய்த வின் ஸ்டார் சிவக்குமாரை கைது செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

🔹 ஓசூரில் பணி முடிந்து வீடு திரும்பிய காவல்துறை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை. வேனை நிறுத்தி ஓட்டுநர் அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டு.

🔹 தேனி அருகே அழைப்பிதழ் தருவது போல வீட்டில் நுழைந்து தம்பதிக்கு அரிவாள் வெட்டு. காயமடைந்த தம்பதிக்கு சிகிச்சை, தப்பியோடிய இளைஞர்களுக்கு வலை.

🔹 தேனி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் படுக்கைகளில் எலிகள் உலா வரும் வீடியோ. போதிய சுகாதாரமின்றி இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

🔹 சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை. குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகு நியமனம் செய்யப்படுவர் என எதிர்பார்ப்பு.

🔹 நோய்வாய்ப்பட்ட, ஆக்ரோஷமான நாய்களை கருணைக்கொலை செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதி. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்தாலும் பிடிபட்ட இடத்திலேயே மீண்டும் விட தடை.

🔹 ஒடிசாவில் சாலையில் வைத்து இளம் தம்பதியினர் மீது கொடூர தாக்குதல். பொதுமக்கள் முன்னிலையில் அத்துமீறியவர்களுக்கு போலீஸ் வலை.

🔹 கர்நாடகா வணிக வளாகத்தில் பாதி வழியில் பழுதாகி நின்ற லிப்ட். சிக்கித் தவித்த 9 பேரை ஒரு மணி நேரம் போராடி மீட்ட மீட்புக்குழு.

🔹 6 நாட்களுக்கு முன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பஞ்சாபி பாடகி சடலமாக மீட்பு. கனடாவில் இருந்து வந்து கொலை செய்துவிட்டதாக இளைஞர் மீது குற்றச்சாட்டு.

🔹 முதலமைச்சர் அறையில் ஒருவர் ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியீடு. அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்திய போது ரீல்ஸ் எடுத்ததால் சர்ச்சை.

🔹 ஈரோடு மாநகரில் 12 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அலைமோதிய கூட்டம். பாட்டிலுக்ககு 10 முதல் 30 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாகவும் புகார்.

🔹 உத்தரபிரதேசத்தில் பாலியல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவருக்கு உற்சாக வரவேற்பு. தோளில் சுமந்தபடி ஆதரவாளர்கள் ஊர்வலமாக சென்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி.

🔹 மனித உரிமை மீறல்கள் குறித்த கேள்விக்கு மோடி பதிலளிக்கவில்லை என நார்வே செய்தியாளர் குற்றச்சாட்டு. கொரோனா தடுப்பூசி விநியோகம், பெண்களுக்கு வாக்குரிமை போன்றவற்றை பட்டியலிட்டு இந்தியா பதிலடி

🔹 நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தை காண ஒன்றுகூடிய ஊர் மக்கள். தூத்துக்குடியில் 214 பேரை திரையரங்கிற்கு அழைத்து சென்ற கருப்பசாமி பக்தர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!